தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Published On 2025-10-24 21:13 IST   |   Update On 2025-10-24 21:13:00 IST
  • கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
  • கூட்டத்தில் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகைகத்பட், மேயர் மகேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

"கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குமரி மாவட்டத்தில் 60,702 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைகள் உள்ளன. 2 லட்சத்து 30 ஆயிரத்து 662 நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பி.எச்.எச். குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 286 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News