ராமதாஸ்- அன்புமணி இடையே திடீர் மனக்கசப்புக்கு இதுதான் காரணம்- தங்கர் பச்சான் கொடுத்த விளக்கம்
- பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது.
- தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. பா.ம.க. மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்கும் போராட கூடிய கட்சி. இதில், பின்னடைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இருவரிடையே சில விஷயங்கள் நடக்கிறது.
பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பா.ம.க. தன்னை தற்போது புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நான் உணர்கிறேன். அதற்குள் இருக்கும் நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும். மாற்று அரசியலை பா.ம.க. முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.