எடப்பாடி பழனிசாமி முடிவே எங்கள் முடிவு: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
- பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.
- நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறுகிறார். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். அவரது முடிவுதான் எங்களது கருத்து. பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.
நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம். மூத்த அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தது உண்மையா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் முடிவை அவர் தெரிவித்துள்ளார்.
எங்களது முடிவு பொதுச்செயலாளர் அறிவிக்கும் முடிவை பொறுத்து இருக்கும் என்றார்.