தமிழ்நாடு செய்திகள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல்
- உதயநிதி ஸ்டாலின் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
- அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதை கருத்தில் கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.