சென்னைக்கு 700 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள "டிட்வா" புயல்- 8 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்"
- மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
- புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:-
சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று வீசும்.
புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இப்போதைக்கு புயலாக இருந்தாலும் நகர்வை பொருத்துதான் மழை எங்கு, எவ்வளவு பெய்யும் என்பது தெரியும்.
இருப்பினும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.