தமிழ்நாடு செய்திகள்
தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
2024-11-27 03:06 GMT
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-11-27 03:02 GMT
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்பு.
சென்னைக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு தென்கிழக்கு 510 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.