தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றால் அடுத்த இரண்டு தினங்களில் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.