தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
தொடர் கனமழை காரணமாக சீற்றத்துடன் காணப்பட்ட கடற்கரையை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். கடல் சீற்றம் காரணமாக கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் 30-ந்தேதி மிக கனமழை தொடங்கி அதி கனமழை பெய்யும் என்றும் புயல் கரையை கடந்தபின்னர் உள்மாவட்டங்களில், கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை - கடலூர் பரங்கிப்பேட்டை அருகே 30-ந்தேதி ஃபெங்கல் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகே நிவாரண முகாம்களில் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டார். நாகை சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்காலில் கடல் சீற்றம். காலை முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. முன் எச்சரிக்கையாக கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக ஜிசிபி (GCP) எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புயல் நேரத்தில் உதவிக்கு 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவு.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரை பகுதியில் விளைநிலங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பனில் கடல் சீற்றம்.
திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியது. வெள்ளம் தேங்கி உள்ள பகுதிகளில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.