தமிழ்நாடு செய்திகள்

தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-27 08:29 IST   |   Update On 2024-11-27 23:29:00 IST
2024-11-27 05:51 GMT

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 550 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 470 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கி.மீ., நாகைக்கு தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

2024-11-27 05:43 GMT

நாகை மாவட்டம் தோட்டம் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி.

2024-11-27 05:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது.

பழமையான வீட்டை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் மழையில் முழுவதும் இடிந்து விழுந்தது.

2024-11-27 05:22 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், பந்தநல்லூர், அணைக்கரை, திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

2024-11-27 05:21 GMT

கொடைக்கானலில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

2024-11-27 04:57 GMT

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாகையில் 19, கோடியக்கரை, வேளாங்கண்ணியில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

திருப்பூண்டியில் 14, மணலி, திருக்குவளையில் 13, திருவாரூரில் 12, செய்யாறு, சீர்காழியில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

2024-11-27 04:53 GMT

புயல் சின்னம் காரணமாக பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் ஆபத்தான பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்படும் மிதவை கரை ஒதுங்கியது.

பட்டினப்பாக்கம் பகுதியில் தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது.

2024-11-27 04:50 GMT

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-27 04:50 GMT

மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய மிதவை - தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம், கரையை நெருங்கி வரும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

2024-11-27 04:45 GMT

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு தஞ்சை சென்றடைந்தது. தலா 30 பேர் கொண்ட 2 குழுவினர் தஞ்சையில் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News