விஜய்க்கு கூடும் கூட்டம் நிச்சயம் ஓட்டாக மாறும்: தாடி பாலாஜி
- விஜயின் பிரசார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- கூடும் கூட்டம் வாக்காக மாறாது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தாடி பாலாஜி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள குமார சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவரும், நண்பருமான விஜயின் சுற்றுப் பயணம் வெற்றியடைய சாமி தரிசனம் செய்தேன். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. வரும் கூட்டம் வாக்காக மாறும். நிச்சயமாக மாறும்.
இவ்வாறு தாடி பாலாஜி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்களில் முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவு திரண்டு வருகிறார்கள்.
இது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், பிரசாரத்திற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது எனத் தெரிவித்து வருகின்றனர்.
இது சும்மா கூட்டம், இந்த கூட்டம் வாக்காக மாறாதமே எனக் கூறுகிறார்கள். இது உண்மையா? என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தின்போது தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு தொண்டர்கள் உண்மையில்லை. வாக்காக மாறும் என குரல் எழுப்பினர்.