தமிழ்நாடு செய்திகள்

கொரோனா எதிரொலி- தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணிய உத்தரவு

Published On 2025-05-31 20:30 IST   |   Update On 2025-05-31 20:30:00 IST
  • கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
  • முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கு சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியவும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News