தமிழ்நாடு செய்திகள்
'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்ந்
- ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்தார்.