இந்தியா

பீகார் மக்களின் சூரியவழிபாட்டை காங்கிரஸ் அவமதித்துவிட்டது-பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2025-10-30 16:27 IST   |   Update On 2025-10-30 21:57:00 IST
  • பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
  • சாத் பூஜை திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.

பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி பீகார் தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சமாஸ்கிபூர், பெகுசராய் பகுதியில் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். முசாபர்பூரில் இன்று காலை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

இங்கு ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கூடி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.

சாத் பூஜை (சூரிய வழிபாடு) திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.

பீகார் மக்களின் சூரிய வழிபாடு விழாவை காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி.) அவமதித்துவிட்டன. வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்.ஜே.டி. தலைவர்கள் சாத் திருவிழாவை அவமானப்படுத்துகிறார்கள். பீகார் மற்றும் நாட்டு மக்கள் இதை பொறுத்துக் கொள்வார்களா? நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்களா? நீங்கள் அவர்களை தண்டிப்பீர்களா? அல்லது இல்லையா?

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரை மேம்படுத்தி வருகிறோம். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரசால் ஒரு போதும் வளர்ச்சி அடைய செய்ய முடியாது. இந்த கட்சிகள் பல ஆண்டு களாக பீகாரை ஆட்சி செய்தன. ஆனால் அவர்கள் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர்.

ஆர்.ஜே.டி.-காங்கிரசால் கொடுமை, கசப்பு, தவறான ஆட்சி, ஊழல் உள்ளிட்ட 5 விஷயங்களில் அடையாளம் காண முடியும். ரெயில் வேயை கொள்ளையடித் தார்கள். பீகாரை மேம்படுத்த போவதாக சொல்வார்கள். பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி யில் குண்டர்கள் வாகன ஷோரூமை கொள்ளை அடித்தனர். 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கடத்தல் வழக்குகள் இருந்தன.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஏழைக ளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கினோம், பெண்களின் பெயரில் பதிவு செய்தோம். எங்கள் சகோதரிகளின் கஷ்டங்கள் குறையும் வகையில் குழாய் நீர் இணைப்புகள், இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி னோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News