தமிழ்நாடு செய்திகள்
தஞ்சாவூரில் பரபரப்பு- பயணிகள் கண் எதிரே மினி பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொலை
- முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா (26) பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் பயணிகள் காத்திருக்க டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க ஓட்டுனர் சிவா சென்றுள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுநர் சிவாவை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதைதொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டுனர் சிவாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.