தமிழ்நாடு செய்திகள்

நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-11-01 12:57 IST   |   Update On 2025-11-01 12:57:00 IST
  • எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
  • போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும்.

சென்னை:

தமிழ்நாடு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! தமிழ்நாடு போராடும்_ தமிழ்நாடுவெல்லும் என கூறியுள்ளார். 



Tags:    

Similar News