தமிழ்நாடு செய்திகள்

இதுவரை கண்டிராத அளவுக்கு மழை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-02 14:22 IST   |   Update On 2024-12-02 14:22:00 IST
  • ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.
  • எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின்ர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

* விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவு மழையை கண்டுள்ளது.

* பருவமழை தொடங்குவதற்கு முன்னரே ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம்.

* தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.

* மீட்பு பணி குழு, தீயணைப்பு வீரர்கள் என பலரும் இணைந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.

* 140-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

* நீர் தேங்கிய பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

* 1.29 ஹெக்டர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* மழை முழுமையாக நிறைவடைந்ததும் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிச்சயமாக இழப்பீடு வழங்கப்படும்.

* துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சியர்கள் முழு அர்ப்பணிப்புடன் மீட்பு, கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொறுப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன்.

* ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.

* நமக்கான நிதியை ஒதுக்கவில்லை என்றாலும் எவ்வாறு சமாளிப்பது என ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

* எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News