தமிழ்நாடு செய்திகள்

சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-22 08:32 IST   |   Update On 2025-08-22 08:32:00 IST
  • நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
  • வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்தது சென்னை.

சென்னை மாநகரம் இன்று தனது 386-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் #சென்னை!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News