தமிழ்நாடு செய்திகள்

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2024-11-29 08:50 IST   |   Update On 2024-11-29 08:50:00 IST
  • வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார். 

Tags:    

Similar News