ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்
- கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.
- கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.
* கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.
* சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது, சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.
இதனை தொடர்ந்து, அரசு அனுப்பிய மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு அனுப்பிய நிலையில் சித்த மருத்துவ பல்கலை குறித்த கவர்னரின் கருத்தை சட்டசபை நிராகரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் கருத்துக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.