தமிழ்நாடு செய்திகள்

பெரியார் பெயருக்கு பின்னால் சாதி பெயர்- யு.பி.எஸ்.சி. தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி

Published On 2025-05-25 13:38 IST   |   Update On 2025-05-25 13:38:00 IST
  • சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
  • தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.

சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

சென்னையில் தேர்வு நடைபெறும் 69 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மண்ணடியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் மட்டுமே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை பார்த்து தேர்வு எழுத சென்றவர்கள் குழப்பம் அடைந்தனர்.

தேர்வு முடிவடைந்த நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.

சுயமரியாதை இயக்கம் தொடங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கேள்வித்தாளில் 4 விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News