வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு - அரசியலமைப்பை பாதுகாக்க போராடுவோம் - த.வெ.க.
- வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
- தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து எதிர்க்கடசிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டது.
இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.
மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறுவரையரை செய்வதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் உறுதியாக பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.