தமிழ்நாடு செய்திகள்

உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றுவோம்; அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்!- அன்புமணி

Published On 2025-07-01 11:42 IST   |   Update On 2025-07-01 11:42:00 IST
  • அன்னை, தந்தை, ஆசிரியர், கடவுள் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள்.
  • உயிரைப் படைத்தது இயற்கை என்றாலும் அதைக் காப்பவர்கள் மருத்துவர்கள் தான்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மருத்துவராக பணியாற்றி முதலமைச்சராக உயர்ந்த பி.சி.ராயின் பிறந்தநாளும், நினைவுநாளுமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னை, தந்தை, ஆசிரியர், கடவுள் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். உயிரைப் படைத்தது இயற்கை என்றாலும் அதைக் காப்பவர்கள் மருத்துவர்கள் தான். அதனால் அவர்கள் போற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 8 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டில் அதிகாரம் நமது கைகளுக்கு வரும் போது அவை அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ்விப்போம்! என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News