தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி நோக்கி படையெடுக்கும் நிர்வாகிகள் - வெறிச்சோடியது தைலாபுரம்

Published On 2025-05-30 10:48 IST   |   Update On 2025-05-30 11:07:00 IST
  • மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்கிறார்.
  • புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி ராமதாஸ் வழங்குகிறார்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அன்படி, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரத் தொடங்கி உள்ளனர்.

இதனால் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைக் காணும்போது பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்கிறார். இதன்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி ராமதாஸ் வழங்குகிறார். 

Tags:    

Similar News