ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: அனந்தபுரி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்
- தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன.
- மறுமார்க்கத்தில் இந்த ரெயில் வருகிற 16-ந் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும்.
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன.
இதற்கிடையே, கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20636) வருகிற 15-ந் தேதி முதல் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20635) வருகிற 16-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும்.
அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16752) வருகிற 15-ந் தேதி முதல் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16751) வருகிற 16-ந் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும்.