தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது- பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

Published On 2025-09-04 10:21 IST   |   Update On 2025-09-04 10:21:00 IST
  • அ.தி.மு.க.வுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • அழைப்பு விடுக்காததால் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பா.ஜ.க.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர், அ.தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என அமித் ஷா அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எல். முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவான், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அழைப்பு விடுக்காததால் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. 

Tags:    

Similar News