அனைத்து மகளிருக்கும் டிசம்பர் 15ம் தேதி முதல் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின்
- கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
- மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.
திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருது வாங்கி உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே திருவள்ளூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு முதல்வர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் ஆட்சியில்தான் ரேசன்கடை திறக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் கனவு இல்லம் வாயிலாக ஏராளமானோர் வீடு பெற்று உள்ளனர். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.
மாணவி தான்யாவின் இல்லத்திற்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தவர் முதலமைச்சர். தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி.
கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர் தொகுதிகளில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். தமிழ கத்தில் ஏராளமான திட்டங் கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும்.
டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளி ருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பின ருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.