தமிழ்நாடு செய்திகள்

நேற்று முளைத்தவர்கள் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறார்கள்- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

Published On 2024-12-07 18:18 IST   |   Update On 2024-12-07 18:18:00 IST
  • திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது ? மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் ஆள முடியும்.

திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது ? மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் ஆள முடியும்.

நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள்.

திராவிடம் என்ற வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கூட்டம் கண்டபடி பேசுகிறது.

தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் கட்சி ஆரம்பித்துள்ளார் ஒருவர். மக்களுக்காக அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News