தமிழ்நாடு செய்திகள்

நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

Published On 2025-08-03 22:00 IST   |   Update On 2025-08-03 22:00:00 IST
  • தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
  • ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு.

திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த, ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இந்த கூட்டத்தில், தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News