மக்களுக்கு விரோதமாக அன்று வெள்ளைக்காரன், இன்று திமுக: பாமக திலகபாமா விளாசல்..!
- ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது.
- போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
பாமக-வின் திலகபாமா தென்காசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விரோதமாக இருக்கின்ற.., அன்று வெள்ளைக்காரன் விரோதமாக இருந்தான். இன்று திமுக விரோதமாக இருக்கிறது. இதற்கு எதிராக இன்று ஒருங்கிணைக்கும் பணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மூலம் செய்து கொண்டிக்கிறார். அந்த வகையில் அனைத்து தமிழ்மக்களும் ஒன்றிணையும் கட்டாயத்தில் இருகிக்கிறோம்.
மக்கள் விரோதம் என எந்த அர்த்தத்தில் சொல்கிறோம் என்றால், இன்று பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. குழந்தைகளை பத்திரப்படுத்த (பாதுகாக்க) முடியவில்லை. பெண்களை பத்திரப்படுத்த முடியவில்லை. போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் காவல்துறை நிர்வாகம் எவ்வளவு முக்கியமானது?. அவர்களுக்கு சாதகமாக யார் இருப்பார்களோ? அவரை சட்டத்தை வளைத்து கொண்டு வந்துள்ளார்கள். இது மிகவும் மோசமான முன்னுதாரணம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகமிக முக்கியம். இந்த நேரத்தில் முதலமைச்சர் இதை உடனடியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் டிஜிபி உத்தரவு குறித்து சொல்லியிருக்கிறது. அதையும் மீறி சட்டத்தை வளைத்து நியமனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு திலகபாமா கூறினார்.