தமிழ்நாடு செய்திகள்

அதிமுக இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்- ராஜேந்திர பாலாஜி

Published On 2025-05-07 15:08 IST   |   Update On 2025-05-07 15:08:00 IST
  • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
  • பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகள்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.

பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.

இந்நிலையில், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேசுயுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்" என்றார்.

Tags:    

Similar News