தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு

Published On 2025-04-08 14:32 IST   |   Update On 2025-04-08 14:32:00 IST
  • கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டது என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.
  • துரைமுருகன் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் வலியுறுத்தினர்.

சட்டசபையில் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர சக்கரபாணி பதில் உரையாற்றினார். அப்போது அ.தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டது என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் முன்னவர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் பேச அனுமதி கேட்டனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

முன்னவர் துரைமுருகன் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய அ.தி.மு.க.வினர் உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News