2026 தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
- மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
- ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பணிகளை மேற்கொள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியை வலுப்படுத்த பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் என்பதால் அவருடைய பெயர் மாவட்ட பொறுப்பாளர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது.
இதேபோல், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
கட்சி வளர்ச்சி பணிகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து பொறுப்பாளர்கள் வளர்ச்சி பணி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.