தமிழ்நாடு செய்திகள்

கரூருக்கு விஜய் தாமதமாக வரவில்லை - ஆதவ் அர்ஜுனா

Published On 2025-10-13 12:04 IST   |   Update On 2025-10-13 12:04:00 IST
  • சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் இருந்தது என்றால் கரூர் எல்லையில் விஜயை போலீசார் வரவேற்றது ஏன்?
  • எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்தபிறகே விஜய் பேசத் தொடங்கினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

* விஜய் தாமதமாக வந்தார் என்று குற்றம்சாட்டினர். காவல் துறை அனுமதித்த மதியம் 3 முதல் 10 வரைக்கு உள்ளாகத்தான் விஜய் வந்தார்.

* விஜய் தாமதமாக வந்தார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு

* சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் இருந்தது என்றால் கரூர் எல்லையில் விஜயை போலீசார் வரவேற்றது ஏன்?

* கூட்டத்தில் விஜய் வாகனம் நுழைந்தபோது ஒட்டுமொத்த காவல்துறை எங்கு நிறுத்த சொன்னதோ அங்கு நிறுத்திதான் பேசினார்.

* எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்தபிறகே விஜய் பேசத் தொடங்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News