தமிழ்நாடு செய்திகள்

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்

Published On 2025-07-01 08:32 IST   |   Update On 2025-07-01 08:32:00 IST
  • தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
  • அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

அதேவேளையில், ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலியில், ஆதார் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இன்று முதல் இருந்து 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் மட்டுமின்றி, அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News