தமிழ்நாடு செய்திகள்
எண்ணூரில் சோகம்: அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி
- அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடந்தது.
- திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை:
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.