தமிழ்நாடு செய்திகள்

கரூரில் த.வெ.க. போராட்டத்துக்கு போலீசார் விதித்த 6 நிபந்தனைகள்

Published On 2025-11-16 10:00 IST   |   Update On 2025-11-16 10:00:00 IST
  • பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும்.

கரூரில் த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வருகிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு குளறுபடிகளை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதற்காக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் போலீஸ் அனுமதி கேட்டு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார்.

இதையடுத்து 6 முக்கிய நிபந்தனைகளை விதித்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைப்பதற்கு அனுமதி இல்லை, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடத்தவேண்டும், மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் யாரேனும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு கூம்பு வடிவ ஒலி அமைப்புகள் பயன்படுத்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

Tags:    

Similar News