கரூர் சம்பவத்தில் 41 பேரின் உடல்கள் அவசரமாக உடற்கூராய்வு - சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம்
- சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
- கரூர் பெருந்துயர சம்பவத்தில் காயம் அடைந்த அனைவரும் தற்போது குணமடைந்தனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் உடல்கள் அவசரமாக கூராய்வு செய்யப்பட்டது குறித்த சர்ச்சைகளுக்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்தனர். தகரக்கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சித்தனர்.
* ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்த நிலையில் விபத்தை தவிர்க்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்து இருக்கிறார்.
* கூட்ட நெரிசலில் சிக்கி சோர்வடைந்தவர்கள் உதவி கோரியதால்தான் அங்கிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்தனர்.
* உடற்கூராய்விற்காக 24 மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அதிகாலை 1.47 மணிக்கு முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டது.
* சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
* 24 மருத்துவர்கள், 16 உதவியாளர்கள் என குழு அமைத்து உடற்கூராய்வு நடத்தி உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
* அதிகாலை 1.47 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வு மறுநாள் பிற்பகல் முடிந்து உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
* கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* பிணவறையில் 41 உடல்கள் வைக்க வசதி இல்லாததால் தான் விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது.
* கரூர் ஆட்சியரின் அனுமதி பெற்று முறையாக உடற்கூராய்வு செய்யப்பட்டு 41 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
* கரூர் பெருந்துயர சம்பவத்தில் காயம் அடைந்த அனைவரும் தற்போது குணமடைந்தனர்.
* ரூ.4.84 கோடி அளவுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 41 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழக்கப்பட்டது.
* சட்டப்படி இவ்விவகாரத்தை அரசு விரைந்து கையாண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.