தமிழ்நாடு செய்திகள்

நடிகை விஜயலட்சுமி விவகாரம்- விசாரணைக்கு நேரில் ஆஜராவதாக சீமான் அறிவிப்பு

Published On 2023-09-14 17:15 IST   |   Update On 2023-09-14 17:15:00 IST
  • விசாரணையின்போது புகார் கொடுத்த விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் எதிரே நிற்க வேண்டும் என கூறினார்.
  • பயண திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியம்.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் அடிப்படையில், சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி ஏற்கனவே சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வளசரவாக்கம் போலீசார், பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்று சம்மன் வழங்க முடிவு செய்தனர். நாளை நேரில் ஆஜராகுவதற்கான சம்மனை வழங்க சென்றபோது, சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்துவிட்டது.

சீமான் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்த கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியும், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சம்மனை பெற்றுக்கொண்டு மற்றொரு தேதியில் நேரில் ஆஜராகுவார் எனவும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமியின் விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் இதுதொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார். அதில், "நான் விசாரணைக்கு நேரில் வரும்போது என் மீது புகார் கொடுத்த விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் எதிரே நிற்க வேண்டும் என கூறினார்.

மேலும் அவர், நான் ஒரு பக்கம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறேன், அவர்கள் மற்றொரு பக்கம் வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் குற்றச்சாட்டில் எந்த உண்மையும், அடிப்படையில் இல்லை.

கட்சி நிகழ்வுகள் உள்ளிட்ட பயண திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியம்.

அதனால், ஒரே நாளில் ஒரே நேரத்தில் மூவரையும் வைத்து விசாரணை நடத்தி புகாரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News