தமிழ்நாடு

வேங்கைவயல் கிராமத்தில் தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனர் ரவி வர்மன் விசாரணை

வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனர் ரவிவர்மன் விசாரணை

Published On 2024-02-06 08:19 GMT   |   Update On 2024-02-06 08:57 GMT
  • 147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  • அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனரகத்தில் புகார் மனு அளித்தார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனரகத்தில் புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் ரவி வர்மன் இன்று வேங்கைவயல் கிராமத்தில் விசாரணை நடத்தினார்.

குடிநீர் மேல் நிலைத்தொட்டியை பார்வையிட்ட அவர், கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடத்திலும் அவர் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது உடனிருந்த ஆதிதிராவிட நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் தாசில்தார்களிடமும், சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் இவ்வழக்கை விசாரணை செய்து வரும் காவல்துறையினரிடத்தில் எந்தெந்த வகையில் விசாரணை செய்யப்பட்டது என்பது குறித்து கலந்து ஆலோசித்தார்.

Tags:    

Similar News