தமிழ்நாடு

போலி கல்வி நிறுவனம் நடத்தி 500 பேருக்கு சான்றிதழ்கள்: 4 பேர் கைது

Published On 2023-12-16 08:33 GMT   |   Update On 2023-12-16 08:33 GMT
  • அமெரிக்க தூதரகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • மோசடியின் பின்னணியில் அரசியல் தொடர்பு உள்ளதா?

சென்னை:

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் போலியாக கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்த நபர் ஒருவர் அளித்த கல்வி சான்றிதழ் போலியானது என்பதை தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வில்லிவாக்கத்தில் செயல்பட்டு வந்த போலி கல்வி நிறுவனம் 500 பேருக்கு போலி சான்றிதழ்களை வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அளித்த பேட்டியில், இந்த மோசடியின் பின்னணியில் அரசியல் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது பற்றியெல்லாம் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News