தமிழ்நாடு செய்திகள்

உலக மக்களிடம் ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க ஈஸ்டர் வாழ்த்து- த.வெ.க தலைவர் விஜய்

Published On 2024-03-31 08:48 IST   |   Update On 2024-03-31 08:48:00 IST
  • உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஈஸ்டர் வாழ்த்து பதிவு.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, உலக தலைவர்கள் பொது மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News