தமிழ்நாடு

பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தனர்- நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை

Published On 2024-04-18 06:01 GMT   |   Update On 2024-04-18 06:48 GMT
  • வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
  • விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.

கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.

மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News