தமிழ்நாடு

கோவைக்கு ஒரே விமானத்தில் வந்த முதலமைச்சர், கவர்னர்

Published On 2023-12-18 05:01 GMT   |   Update On 2023-12-18 05:45 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.
  • முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.

இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த அதே விமானத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் வந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் திருச்செங்கோடு சென்றார்.

கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அந்த கருத்துக்களுக்கு முதலமைச்சரும், தி.மு.க அமைச்சர்களும் பதில் கருத்துக்களையும் கொடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து கோர்ட்டு கருத்து தெரிவித்தன் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். முதலமைச்சரும் வெள்ள நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக பதில் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் இன்று வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News