பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், வீரபாண்டி, கூடலூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் அடியோடு குறைந்தது. தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 52.82 அடியாக உள்ளது. நேற்று 447 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பு 869 கனஅடி. இருப்பு 2384 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49 அடி. வரத்து 20 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.64 அடி. திறப்பு 6 கன அடி.
பெரியாறு 15.4, தேக்கடி 16, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 2, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.