தமிழ்நாடு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- பாமக வேட்பாளர் அறிவிப்பு

Published On 2024-06-15 11:36 IST   |   Update On 2024-06-15 12:04:00 IST
  • வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. மாநில துணை தலைவராக உள்ள சி.அன்புமணி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.அன்புமணி 2016 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு 3-வது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News