தமிழ்நாடு செய்திகள்
விஜயகாந்த் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்
- விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார்.
- விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை:
நடிகரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் எக்ஸ் தள கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா மாற்றியுள்ளார். தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளரான பிரேமலதா @imPremallatha என மாற்றியுள்ளார்.