தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...
2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
2023-24 ஆம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை.
நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை பயிர் சேதத்திற்கு விரைவில் 208.20 கோடி நிதி வழங்கப்படும்.
கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
4773 குளங்கள், ஊரணிகள், வாய்க்கால்கள் தூர்வரப்பட்டுள்ளன.
23,237 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
பயிர் இழப்பீடு தொகையாக 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டில் 95.39 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்ற பயிர் பரப்பாக உயர்ந்துள்ளது.
சட்டசபைக்கு பச்சைத்துண்டு அணிந்து வந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள்