தமிழ்நாடு செய்திகள்

ராகுல்காந்தி நடைபயணம் நாளை 100-வது நாளை எட்டுகிறது: கோலாகலமாக கொண்டாட கே.எஸ்.அழகிரி அழைப்பு

Published On 2022-12-15 12:47 IST   |   Update On 2022-12-15 13:04:00 IST
  • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாளை டிசம்பர் 16 அன்று ஜெய்ப்பூரில் கோலாகலமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
  • தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாளை டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையிலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மகத்தான வெற்றி குறித்தும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News