தமிழ்நாடு

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவு

Published On 2022-09-30 10:45 GMT   |   Update On 2022-09-30 11:02 GMT
  • அக்டோபர் 2ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தது.
  • காவல்துறை அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், சட்ட ஓழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. இதற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.

மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டிருந்தது. மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் காவல் துறை தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 2ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதிக்கு பதில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், நவம்பர் 6ம் தேதி பேரணிக்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News