தமிழ்நாடு

பழனியில் இன்று 2ம் நாளாக கோவிலை வட்டமடித்த ராணுவ ஹெலிகாப்டர்

Published On 2023-07-26 05:45 GMT   |   Update On 2023-07-26 05:45 GMT
  • ஹெலிகாப்டர் பழனி மலைக்கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே தாழ்வாக பறந்து சென்றது.
  • பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி:

பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றிக்காட்டி வருகின்றனர்.

பழனி மலைக்கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே கடந்த 2 நாட்களாக காலை நேரத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தாழ்வாக பறந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நேற்று அதிக ஓசையுடன் ஹெலிகாப்டர் பழனி மலைக்கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே தாழ்வாக பறந்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் ஹெலிகாப்டரை தங்கள் செல்போன் மூலம் படம் பிடித்தனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட பகுதிகளை வட்டமிட்டபடி இன்று 2-ம் நாளாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்றது.

இதனால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News